சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Épinay-sur-Seine (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நகரின் காவல்நிலையத்துக்கு கடந்த ஓகஸ்ட் மாதம் வருகை தந்த பெண் ஒருவர், தமது 14 வயது மகளை காணவில்லை எனவும், யாரேனும் கடத்தியிருக்க கூடும் எனவும் புகார் அளித்துள்ளார்.

அதை அடுத்து விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர் Thorigny-sur-Marne (Seine-et-Marne) நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வைத்து தேடப்பட்டு வந்த சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக அறிந்துகொண்டனர்.

பின்னர் காவல்துறைனர் மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பில், குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இரு சிறுமிகளை மீட்டனர். அவர்கள் 14 மற்றும் 12 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கைதானவர்கள் 21 மற்றும் 19 வயதுடைய இளைஞர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கான நீதிமன்ற விசாரணை வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெற உள்ளது.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!