வயிற்றுக்குள் அலாரம்! அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்!
கோசாவா நாட்டில் ஓல்டு பிரிஸ்டினா பகுதியில் வசித்து வருபவர் 33 வயதான இளைஞர் . இவர் கடந்த சில நாட்களாகவே மிகக் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்தார்.என்ன என்னமோ மருந்துகள் கொடுத்து பார்த்தும் வயிற்று வலி சரியாகவே இல்லை. உடனே மருத்துவர்கள் அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தனர்.

அதில் அவரது வயிற்றில் நோக்கியா போன் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது மருத்துவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதுவும் 2000ல் வெளியான கனமான நோக்கியா 3310 மாடல்.இதனை எப்படி விழுங்கினார் என்பதே ஆச்சர்யம் தான். இதையடுத்து அந்த நபருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வயிற்றில் 3 பாகங்களாக இருந்த நோக்கியா போனை மருத்துவர்கள் அகற்றினர். தற்போது அந்த நபர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அந்த இளைஞர் விழுங்கியதால் அவருக்கு கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தியுள்ளது.போனை அகற்றிவிட்டாலும் பேட்டரியில் இருந்து வெளியேறிய அமிலம் வயிற்றுக்குள்ளேயே கலந்திருப்பதால் அந்த நபரின் உயிருக்கு இன்னும் அச்சுறுத்தல் உள்ளது என மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. இத்தனை கனமான நோக்கியா போனை விழுங்கிய சம்பவம் மருத்துவ வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.