அநுராதபுர விபத்தில் முகம் சிதைவடைந்து ஒருவர் பரிதாப மரணம்!
#Anuradapura
#Accident
Yuga
3 years ago

அநுராதபுரம் மாவட்டம், கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யக்கல கல்குளம் வீதி, குட்டிக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
புளியங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயது நபரே மரணமடைந்துள்ளார்.
இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதன்போது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் முகம் சிதைவடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த விபத்துத் தொடர்பில் கலென்பிந்துனுவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



