பிரான்ஸில் கொவிட் செலவுகள் இதுவரை 200பில்லியன் யூரோக்கள்.

பிரான்சில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததில் இருந்து இதுவரை €200 பில்லியன் யூரோக்கள் வரை செலவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை பொது செலவுகளின் கணக்கு அமைச்சர் Olivier Dussopt இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2021 ஆம் ஆண்டின் தற்போது வரை கொரோனா வைரசின் ஆதிக்கம் பிரான்சில் பல பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இவ்விரு ஆண்டுகளில் €170 பில்லியன் யூரோக்களில் இருந்து அதிகபட்சமாக€200 யூரோக்கள் வரை செலவாகியுள்ளதாக அமைச்சர் Olivier Dussopt தெரிவித்தார்.
இந்த தொகையில் €165 பில்லியன் யூரோக்களை அரசு நேரிடையாக செலவு செய்துள்ளது. அதேவேளை கொரோனா வைரஸ் ஏற்படுத்திய ‘வருவாய் இழப்பும்’ இவ்விரு வருடங்களில் பெரும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
மேலும், பிரான்சில் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.



