யாழ்ப்பாணம் தொண்டமானாறு நன்னீரேரி பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு!
#Jaffna
#Death
Yuga
4 years ago
யாழ்ப்பாணம்- தொண்டமானாறு நன்னீரேரிபகுதியில் சடலமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொண்டமனாறு நன்னீரேரி பகுதியில் ஆணொருவர் சடலமாக மிதந்து கொண்டிருப்பதை அவதானித்த மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதையடுத்து, குறித்த சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் முதியவர் எனவும் அவர் தொடர்பிலான தகவல்களை அறிய மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.