தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 376 பேர் கைது
#SriLanka
#Curfew
#Arrest
Yuga
4 years ago
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 376 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தக் காலப்பகுதியில் 18 வாகனங்கள் காவல்துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய, இதுவரையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 78,253 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், உரிய அனுமதியின்றி 109 வாகனங்களில் பயணித்த 225 பேர், மேல் மாகாண எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 சோதனைச் சாவடிகளில் வைத்துத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.