கஞ்சா கடத்திய போலீஸ் மற்றும் மூவர் கைது

மாங்குளத்தில் கஞ்சாவுடன் கைதான பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்டவர்கள் எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு காரில் கஞ்சா கடத்தி செல்வதாக மாங்குளம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஏ9 வீதியில் மாங்குளம் பகுதியில் வைத்து குறித்த காரை சோதனையிட்ட பொலிசார் 6 கிலோ கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளனர்.
இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புத்தளத்தினை சேர்ந்த 34 அகவையுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் மற்றும் நெச்சிகம பகுதியினை சேர்ந்த 25 அகவையுடைய நபரும் யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியினை சேர்ந்த 32 அகவையுடை நபருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட மாங்குளம் பொலிசார் இன்று (25) குறித்த நபர்களை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய வேளை இவர்களை எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



