ஐநா பொதுசபை கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேசில் அதிபர் போல்சனாரோவின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி
Keerthi
4 years ago
நியூயார்கில் ஐநா பொதுசபை கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேசில் அதிபர் போல்சனாரோவின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நியூயார்க்கில் ஐநா பொதுசபை கூட்டத்தில் பிரேசில் அதிபர் போல்சனாரோவுடன் அவரது மகன், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஏற்கெனவே அதிகாரி மற்றும் அமைச்சர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் போல்சனாரோவின் மகன் எடுவார்டோ போல்சனாரோவுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் போல்சனாரோவும் முன்னெச்சரிக்கையாக தனிமைபடுத்தப்பட்டுள்ளார்.