அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்த சுமந்திரன் – சாணக்கியன்
#Prison
#M. A. Sumanthiran
Prathees
4 years ago
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன், இராசமாணிக்கம் சாணக்கியன் உள்ளிட்டோர் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை இன்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
சுமார் 2 மணிநேர கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போதுஇ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களை விடுவிப்பது தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
இந்தநிலையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்ட நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.