ஜோ பைடன் பேச்சால் வெள்ளை மாளிகையில் சிரிப்பலை

கடந்த 1972-ம் ஆண்டு எனது 29-வது வயதில் முதல் முறையாக செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போது, மும்பையில் இருந்து பைடன் என்ற பெயரில் ஒருவர் எனக்கு வாழ்த்து அனுப்பி இருந்தார். ஆனால் அதை நான் அப்படியே விட்டுவிட்டேன். ஆனால் இந்தியாவில் 5 பைடன்கள் வசித்து வருவதாக மறுநாள் காலையில் செய்தியாளர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
ஏற்கனவே கிழக்கிந்திய தேயிலை கம்பெனியிலும் ஜார்ஜ் பைடன் என்ற பெயரில் கேப்டன் ஒருவர் இருந்திருக்கிறார். அவர் ஒரு அயர்லாந்துகாரர் என்பதை ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை. எப்படியிருந்தாலும், எனது இந்திய தொடர்பு குறித்து இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே இந்த சந்திப்பின் நோக்கம் அனைத்தும் எனது இந்திய தொடர்பை கண்டுபிடிப்பதற்கு உதவுவதற்காகவே இருக்கும்.
இவ்வாறு பைடன் கூறியதும் பிரதமர் மோடி உள்பட அங்கே இருந்தவர்கள் அனைவரும் பலமாக சிரித்தனர்.
இதற்கு பிரதமர் மோடி மறுமொழியாக, ‘இந்தியாவில் உங்களின் குடும்ப பெயர் இருப்பது குறித்து நீங்கள் ஏற்கனவே என்னிடம் விரிவாக கூறியிருக்கிறீர்கள். எனவே இது குறித்த ஆவணங்களை திரட்டுவதற்காக நான் நிகழ்த்திய வேட்டையின் பலனாக சில ஆவணங்கள் உங்களுக்காக கொண்டு வந்திருக்கிறேன். இவை உங்களுக்கு உதவலாம்’ என்று கூறினார். இதை கேட்டதும் அங்கே சிரிப்பலை மேலும் அதிகரித்தது.



