கொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு ! அனைவரும் பதிவு செய்யுங்கள்...
#Colombo
Yuga
3 years ago

கொழும்பு மாநகரசபை அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுமாறு சொத்து உரிமையாளர்களுக்கு கொழும்பு மாநகரசபை அறிவித்துள்ளது.
சொத்தின் உரிமையைப் பாதுகாக்க மாநகரசபையின் கீழ் சொத்துகளை பதிவு செய்வது அவசியம் என கொழும்பு மாநகர ஆணையாளர் ரோஷனி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகரசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் இதுவரை பதிவு செய்யப்படாத சொத்துக்கள் பற்றிய தகவல்களை நகரவாரியாக பெற முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் www.colombo.mc.gov.lk



