பிரான்ஸ் சுரங்கப்பாதையில் நபர் ஒருவர் மூச்சுத்திணறலால் மரணம்!
#world_news
Mugunthan Mugunthan
3 years ago

பிரான்சில் சுரங்கப்பாதை காவலர்கள் தடுத்து நிறுத்தியதால், 37 வயதான ஒருவர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார்
இது தொடர்பாக பிரெஞ்சு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.பிரான்சின் தெற்கு நகரமான மார்சேலில் (Marseille) உள்ள ஒரு சுரங்கப்பாதையில், வியாழக்கிழமை அன்று 37 வயதான நபர் ஒருவரை அங்கிருந்த செக்யூரிட்டி ஏஜென்ட்கள் வலுக்கட்டாயமாக அங்கேயே வைத்து கைது செய்தனர்.
அந்த சுரங்கப்பாதையில் ஆக்சிஜன் கிடைக்காததால் மூச்சு திணறியதன் (asphyxiation death) காரணமாக, அந்த நபர் அங்கயே உயிரிழந்தார். பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரும்போது அவர் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது.
இந்த மரணம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி, பிரான்சில் பொலிஸ் அதிகாரிகளின் பல வன்முறை முறைகேடுகள், அபாயகரமான கைது செய்யப்படும் நுட்பங்கள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.



