இலங்கையில் திடீரென உயர்ந்த கடல் மட்டம்- மூழ்கும் நிலையில் பல உணவகங்கள்!

கடந்த நாட்களில் ஹிக்கடுவ நாரிகம கடற்கரை பிரதேசத்தில் உள்ள பல விடுதிகள் மற்றும் உணவகங்கள் அதி தீவிரமான கடலரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
கடற்கரையின் சுமார் 100 மீட்டர் பகுதி, முற்றிலும் அரித்து அப்பகுதியில் செயல்பட்டு வந்த விடுதிகள் மற்றும் உணவகங்கள் அழிவுக்கு உட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகைய நிலைமையால் அப்பகுதியின் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விடுதிகள் , உணவகங்ககளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் தற்காலிக தீர்வுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடல் அரிப்பு தொடர்ந்தால் சுற்றுலா விடுதிகள் முழுவதும் கடலில் மூழ்கி விடும் எனவும் இது குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதிகள் மற்றும் உணவகங்கள் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



