சம்பிக்க எம்.பி. சி.ஐ.டியில் 3 மணிநேரம் வாக்குமூலம்!
Reha
4 years ago
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலத்தைப் பதிவுசெய்துள்ளனர்.
கடந்த அரசில் பாரிய நகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்றது எனக் கூறப்படும் தவறான நிதிக் கையாளுகை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுக்கின்றது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.