இலங்கைக்கு விதித்த பயணத்தடையை நீக்கிய மலேசியா
#Covid 19
Prasu
4 years ago
மலேசியாவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது.
உடன் அமுலாகும் வகையில் இத்தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, மலேசிய குடியுரிமை அல்லது நீண்டகால விசாவை கொண்டுள்ளவர்கள், வணிகர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோருக்கு இலங்கையில் இருந்து மலேசியாவுக்கு பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், பல நாடுகள் தமது பயணத்தடை பட்டியலில் இருந்து இலங்கையை நீக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.