சுவிஸ் நதிக்கரையில் காணப்படும் பழங்கால ஒலிவ் எண்ணெய் ஆம்போரா
#world_news
Mugunthan Mugunthan
4 years ago
வட மேற்கு சுவிற்சலாந்தின் ஏஜெர்டனில், உள்ள ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சமீபத்தில் 2000 வருடங்கள் பழமையான ஆம்போரா என்ற ரோம்க் காலத்தின் ஒலிவ் எண்ணெயை எடுத்துச்செல்லும் ஒரு பாத்திரத்தினை கண்டுபிடித்துள்ளார்.
ஆம்போரா இந்த வசந்தகாலத்தில் பழைய ஜிஹ்ல் ஆற்றின் படுக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வெளிச்சத்திற்கு வந்தபோது பெரிதும் அப்படியே இருந்தது. இப்போது அது மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்று பெர்னீஸ் கல்வி மற்றும் கலாச்சாரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
பாத்திரம் 73 சென்ரிமீற்றர் உயரமும் 50 சென்ரிமீற்றர் அகலமும் கொண்டது. இது அநேகமாக நிரம்பும் போது 65 இலிட்டர்களை வைத்திருக்கும். இது கிபி முதல் நுாற்றாண்டிற்குரியது என்று கருதப்படுகிறது.