பிரான்ஸ் காவல்துறை அதிகாரியை தாக்கிய இளைஞன் கைதானார்.

#world_news
பிரான்ஸ் காவல்துறை அதிகாரியை தாக்கிய இளைஞன் கைதானார்.

பிரான்ஸில் காவல்துறை அதிகாரி ஒருவரை தாக்கிய 19 வயதுடைய இளைஞன்  கைது செய்யப்பட்டுள்ளான். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை Échirolles (Isère) நகரில் இடம்பெற்றுள்ளது.

பிரான்ஸில்வீதி கண்காணிப்பில் ஈடுபட்ட காவல்துறையினர், இரு இளைஞர்கள் பாதசாரிகளுக்கான வீதியில் மோட்டார்சைக்கிளில் பயணிப்பதை பார்த்துள்ளனர்.

அவர்களை தடுத்து நிறுத்த அதிகாரிகள் முற்பட்டனர். அப்போது மோட்டார்சைக்கிளில் இருந்து இறங்கிய இளைஞன் ஒருவன் அதிகாரி ஒருவரை தாக்கியுள்ளான்.

அதிகாரியை கீழே தள்ளி விழுத்தி முகத்தில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான்.

சம்பவம் அங்கு நிறைவுறாமல் தொடர்ந்தது. இப்போது குறித்த அதிகாரிகளை சூழ்ந்துகொண்ட சில இளைஞர்கள் அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பின்னர் காவல்துறையினர், தங்களது சக அதிகாரிகளை அழைத்து இச்சம்பவத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

தாக்குதல் நடத்திய 19 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். காயமடைந்த அதிகாரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!