பிரதமர் மஹிந்த ராஜபக்ச பிறப்பித்துள்ள உடனடி உத்தரவு
#Mahinda Rajapaksa
Reha
3 years ago

துறைமுகத்தில் உள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுங்கத்திணைக்கள பணிப்பாளர் மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு பணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இன்று இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பருப்பு, வெள்ளைப்பூடு, ரின்மீன், பால் வகைகள், இஞ்சி, பெருஞ்சீரகம் ஆகிய பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படாதுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவற்றையே விடுவிக்குமாறும், அவற்றை சதொச ஊடாக விற்பனை செய்யுமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.



