கொரோனாவிலிருந்து விடுபடலாம் - பிரான்ஸ் கோடீஸ்வரர் ஸ்டிபன் பன்சல்

பிரெஞ்சு கோடீஸ்வர தொழிலதிபருமான Stephane Bancel உலகிற்கு கொரோனா பிடியிலிருந்து எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்பதை தெரிவித்துள்ளார். இவர் அமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னாவின் தலைமை நிர்வாக அதிகாரியாவார்.
மேலும் Stephane Bancel சுவிஸ் செய்திதாளான Neue Zuercher Zeitung-க்கு பேட்டியளித்திருந்தபோது தடுப்பூசி உற்பத்தி திறன் கடந்த 6 மாதங்களில் அதிகரித்துள்ளதாகவும், அடுத்த வருடம் தேவையான அளவு தடுப்பூசி டோஸ் கிடைக்கும் என்பதால் பூமியில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த முடியும் என்றும் கூறியுள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கான தடுப்பூசி விரைவில் கிடைக்கும். எனவே இயற்கையாகவே தடுப்பூசி போடாதவர்களுக்கும் எதிர்ப்பு சக்தி உண்டாகும். ஏனெனில் பருவகால காய்ச்சல் போன்ற நிலைமைக்கு டெல்டா மாறுபாடு வழிவகுக்கும்.
ஆதலால் நல்ல குளிர்காலத்தை அனுபவிக்க வேண்டுமானால் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதேசமயம் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்டு அனுமதிக்கும் நிலை ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் Stephane Bancel உலகம் இன்னும் ஒரு வருடத்தில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார்.



