அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி - 13 பேர் படுகாயம்

#world_news
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி - 13 பேர் படுகாயம்

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் மெம்பிஸின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்கெட் ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலே ஒருவர் பலியானார். மேலும் 13 பேருக்கு மேல் காயமடைந்துள்ளனர். 

தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார், இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து சூப்பர் மார்கெட்டின் உள்ளே சென்ற போலீசார் அங்கு துப்பாக்கிச்சூட்டிற்கு பயந்து மறைந்திருந்த பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டனர். 

துப்பாக்கிச் சூடு நடத்தியாக சந்தேகிக்கப்படும் நபர் இறந்துவிட்டதாக போலீசார் கூறுவதால், அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

குறைந்தது 12 பேர் உள்ளூர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், ஒருவர் மேல் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் காயங்களின் அளவு தீவிரமாக இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!