பிரான்சில் தமிழர்களின் தங்க நகைகளை திருடும் கும்பல்.

அண்மைய நாட்களில் பல தமிழர்களிடமிருந்து தங்க சங்கிலி, தாலிக்கொடி என பல நகைகளை திருடர்கள் அறுத்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
குறிப்பாக பாரிஸ் மற்றும் பரிசை சுற்றி தமிழர்கள் வசிக்கும் பகுதிகளையே திருடர்கள் குறிவைத்து திருடிவருகின்றனர்.
பல தமிழ் மக்கள் நகைகள் வாங்கிய ஆவணம் இல்லாததன் காரணமாக பொலிசில் முறைப்பாடு செய்ய முடியாது தவிக்கின்றனர்.
நகைகள் வாங்கும் போது மறக்காது நகையின் மதிப்புக்குரிய பற்றுச் சீட்டினை கேட்டு வாங்குங்கள். பற்றுச் சிட்டை இருந்தால் உங்கள் இன்சூரன்ஸ் நீங்கள் பறிகொடுத்த நகைக்கான தொகையை தருவார்கள்.
முடிந்தவரைக்கும் உங்கள் நகைகளை வங்கி லாக்கரில் வையுங்கள், அதுதான் பாதுகாப்பானது. நகைகள் திருடு போனால் போலீசுக்கு தகவல் கொடுக்கவும் , பொலிசில் முறைப்பாடு செய்யாவிட்டால் மீண்டும் திருடர்கள் உங்களை தொடர்வார்கள் என்பதை மறக்க வேண்டாம்.இது தொடர்பாக தமிழ் மக்கள் அவதானமாக இருக்கவும்.



