பிரான்ஸில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று குறைவடைகிறது.
#world_news
Mugunthan Mugunthan
3 years ago

கடந்த 24 மணிநேரத்தில் 6,229 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. செப்டம்பர் மாத ஆரம்பத்தில் தொற்று 2.6% வீதமாக இருந்த நிலையில், தற்போது 1.4% வீதமாக குறைவடைந்துள்ளது.
மொத்தமாக இதுவரை 6,97722 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் 8,237 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 301 பேர் இந்த 24 மணிநேரத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (புதன்கிழமை இரவு மருத்துவமனையில் 8,414 பேர் சிகிச்சை பெற்று வந்திருந்தனர்)
அதேவேளை, தீவிர சிகிச்சைப் பிரிவில் 1,609 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 71 பேர் 24 மணிநேரத்துக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
63 பேர் இந்த 24 மணிநேரத்தில் சாவடைந்துள்ளனர். மொத்த சாவு எண்ணிக்கை 116,371 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 89,556 பேர் மருத்துவமனைகளில் சாவடைந்தவர்களாவர்.



