பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்த முக்கிய அறிவிப்பு இன்று!

Prabha Praneetha
3 years ago
பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்த முக்கிய அறிவிப்பு இன்று!

பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

பல கட்டங்களில் கீழ் பாடசாலைகளை மீள திறக்க எதிர்ப்பார்த்துள்ள நிலையில் இது குறித்து இன்று அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டல்கள் சுகாதார அமைச்சினால் கல்வி அமைச்சிற்கு அண்மையில் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழிகாட்டல்களுக்கமைய பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு இன்று விசேட அறிக்கையொன்றினை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பாடசாலைகளை மீண்டும் திறக்கும் போது உரிய சுகாதார வழிகாட்டல்கள் குறித்து கவனம் செலுத்தப்படுவது மிகவும் அவசியமென சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!