சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம்

#Meeting #Lasantha Alagiyawanna
Prathees
3 years ago
சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம்

வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழு இன்று முற்பகல் 10 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் கூடவுள்ளது.

பால்மா விலையை அதிகரிப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.

அத்துடன், சமையல் எரிவாயு, அரிசி, சீமெந்து மற்றும் கோதுமை மா என்பன தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

சமீபத்தில் நாங்கள் பால் பவுடர், கோதுமை மாவு மற்றும் சீமெந்து நிறுவனங்களுடன் கலந்துரையாடினோம். அவர்கள் விலை உயர்வை கோரினர். விலைகளை உயர்த்த அவர்கள் எதுவும் செய்வதில்லை.

நுகர்வோரையும் பாதுகாக்கும் வகையில் விலை உயர்வு செய்யப்பட்டால் மாத்திரம் அனுமதிக்கப்படும், 

நாங்கள் விலை உயர்வை கொடுத்தால், மேலும் 3 மாதங்களுக்கு மற்றொரு விலை உயர்வை கேட்க வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், கட்டுப்பாட்டு விலையை விடவும், அதிக விலைக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிரான புதிய அபராதத் தொகை அறவீடு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!