தியவன்னா ஓயாவில் எண்ணெய்ப் படலம் (PHOTOS)
#SriLanka
Yuga
3 years ago

தியவன்னா ஓயாவில் எண்ணெய்ப் படலம் மிதப்பதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இது தொடர்பில் உடனடியாக விசாரித்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜெயசிங்கவை அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் தியவன்னா ஓயாவில் எண்ணெய் படலம் இருப்பதாக அமைச்சருக்கு தெரிவித்த நபர், எண்ணெய் படலத்தைக் காட்டும் பல புகைப்படங்களையும் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





