சுவிற்சலாந்தில் எல்லை தாண்டிய சொப்பிங் புதிய விதிகள்
#world_news
Mugunthan Mugunthan
3 years ago

தற்போது சுவிற்சலாந்தில் வசிப்பபோர் வெளிநாடுகளில் பொருட்கள் கொள்முதல் செய்யும் போது 300 பிராங் மதிப்புள்ள பொருட்களை வரி செலுத்தாமல் கொண்டுவர முடியும்.
இந்த தொகையை சுவிஸ் எல்லையைத் தாண்டி கொண்டு வருவதாயின் பொருட்களின் மொத்த மதிப்புக்கு வரி செலுத்தப்பட வேண்டும்.
இருப்பினும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மளிகைப்பொருட்களை நிரப்புவதற்காக எல்லை வழியாக விரைந்து பயணம் செய்பவர்களுக்கு இந்த மதிப்பை 50 பிராங்குகாளக மட்டுப்படுத்த விரும்புகிறார்கள். இந்த நடவடிக்கை சொப்பிங் சுற்றுலாவை கட்டுப்படுத்திவிடும்.
மறுபுறம், வெளிநாடுகளில் 24 மணி நேரத்திற்கு மேல் தங்கியிருக்கும் மக்கள் இன்னும் 300 பிராங்க் மதிப்புள்ள பொருட்களை கொண்டுவர முடியும் என்பது குறிப்படத்தக்கது



