இலங்கையின் மகளிர் பொலிஸ் சார்ஜன்ட் அமெரிக்காவில் சாதனை படைப்பாரா ?
#United_States
#SriLanka
#Police
Yuga
4 years ago
அமெரிக்காவில் நடைபெறும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள மகளிர் பொலிஸ் சார்ஜன்ட் அனுராதா விஜேசிங்க கருணாரத்ன தகுதி பெற்றுள்ளார்.
2021 உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் செப்டம்பர் 20 முதல் 26 வரை அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவின் யாங்க்டனில் நடைபெற உள்ளது.
2003 ஆம் ஆண்டு இலங்கை பொலிஸ்துறையின் பெண் காவலராக சேர்ந்த அனுராதா விஜேசிங்க கருணாரத்ன 2010 இல் வில்வித்தை விளையாட்டிற்குள் புகுந்தார்.
2016 மற்றும் 2019 தெற்காசிய வில்வித்தை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஐந்து வருடங்கள் தேசிய வில்வித்தை சம்பியனாகி இலங்கை பொலிஸ்துறைக்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.