கனடா பொதுத்தேர்தலில் கீரின் கட்சி பரிதாப தோல்வி!

#world_news
கனடா பொதுத்தேர்தலில் கீரின் கட்சி பரிதாப தோல்வி!

கனடா பொது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பெடர் கட்சி வெற்றி பெற, கிரீன் கட்சியின் தலைவர் பரிதாபமாக வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.

மத்திய ரொறன்ரோவில் போட்டியிட்ட கிரீன் கட்சியின் தலைவர் Annamie Paul பரிதாபமாக நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். குறித்த தொகுதியில் லிபரல் கட்சியின் Marci Ien மொத்தம் பதிவான 42,980 வாக்குகளில் 21,563 வாக்குகள்(50.2%) பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார்.

இரண்டாவது இடத்தில் 25.9 சதவீத வாக்குகளுடன் புதிய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் Brian Chang வந்துள்ளார். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Annamie Paul வெறும் 8.5 சதவீத வாக்குகள் பெற்று நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்த முடிவுகள் தமக்கு பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாகவும், தோல்வியை யாரும் விரும்ப மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெடரல் தேர்தலில் Annamie Paul தோல்வியை தழுவியுள்ளதால் தற்போது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே கிரீன் கட்சியின் முன்னாள் தலைவர் எலிசபெத் மே, தமது வெற்றியை உறுதி செய்துள்ளதுடன், கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் கிரீன் கட்சி தமது வேட்பாளர்களை நிறுத்தாததன் காரணத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

கனடாவில் ஒரு பெரிய தேசிய அரசியல் கட்சியை வழிநடத்தி வரும் ஒரே பெண் அரசியல் தலைவர் Annamie Paul தான். மட்டுமின்றி பெடரல் அரசியல் கட்சியை வழிநடத்தும் ஒரே கறுப்பினத்தவர் அல்லது யூத நபரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!