அவுஸ்திரேலியாவில் பாரிய நிலநடுக்கம்!
#Australia
#Earthquake
Yuga
3 years ago

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகருக்கு அருகே நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோளில் 6.0 மெக்னிடியூட்டாக இந்த நில அதிர்வு பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கிழக்கு மெல்பர்னின் மென்ஸ்ஃபில்ட் நகருக்கு அருகில், அந்நாட்டு நேரப்படி இன்று (22) காலை 9.15 மணியளவில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
சிட்னி, விக்டோரியா, கன்பெரா, தஸ்மேனியா மற்றும் நியூசவுத்வேல்ஸ் முதலான பகுதிகளிலும் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலஅதிர்வு காரணமாக கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது தொடர்பான தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



