மரத்தை வெட்டி கொண்டிருந்த நபர் தீயில் விழுந்து மரணம்

பதுளை மாவட்டத்தில் கொஸ்லந்த பொலிஸ் பிரிவின் ஹிவல்கந்துர ரோஸ்பெர்ரி தோட்டத்தில் வசிக்கும் முப்பது வயதுடைய நபர் ஒருவர் தீயில் விழுந்து எரிந்த நிலையில் மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு உயிரிழந்தவர் சிவராஜ் ரவி சந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த 14 ம் திகதி தோட்டத்தை சுத்தம் செய்து,இ இலைகளை சேகரித்து தீ வைத்துள்ளார்.
நெருப்பின் அருகே இருந்த மரத்தில் ஏறும்போது அவர் தீயில் விழுந்து படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து குறித்த நபர் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி பாதிக்கப்பட்டவர் 20ம் திகதி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக கொஸ்லந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



