ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா நுழைய விடுத்த அனுமதியை சுவிற்சலாந்து வரவேற்கிறது.

நவம்பர் 2021 முதல் அமெரிக்காவில் விடுமுறை மீண்டும் வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், நேற்றிலிருந்து அமெரிக்கா செல்வதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது என்று ஹோட்டல் திட்ட செய்தி தொடர்பாளர் பியன்கா கோஹ்விலர் தெரிவித்தார். சூடான புளோரிடாவில் விடுமுறைக்காக அல்லது நியுயோக் நத்தார் சொப்பிங் பயணங்களுக்காக முதல் முன்பதிவு ஏற்கனவே செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
TUI Suisse அவர்கள் ஏற்கனவே வாடிக்கையாளர்களிடமிருந்து கேள்விகளைப் பெற்றுள்ளதாகவும், எப்போது அமெரிக்கா மீண்டும் கிடைக்கும் என்பது பற்றியும் கூறினார். "இந்த வாடிக்கையாளர்கள் அடுத்த சில நாட்களில் தங்கள் முன்பதிவுகளை செய்ய விரும்புவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று செய்தி தொடர்பாளர் மிலிகா வுஜ்சிக் கூறினார்.
கடந்த திங்களன்று வெள்ளை மாளிகை சுவிற்சலாந்து உட்பட 33 நாடுகளைச் சேர்ந்த தடுப்புசி ஏற்றிய வெளிநாட்டவர்கள் நவம்பர் முதல் அமெரிக்காவில் நுழையலாம் என்று அறிவித்திருந்தது. பெரியவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு தங்களுக்கு முழு தடுப்புசி ஏற்றப்பட்டதை நிரூபிக்க மூன்று நாட்களுக்கு மேற்படாத மறை கொவிட் சோதனையை காண்பிக்க வேண்டும்.



