சுவிற்சலாந்தில் 4ஆம் கொவிட் அலை இப்போதைக்கு இல்லை.

சுவிற்சலாந்தில் 24 மணிநேரத்திற்குள் 20ம் திகதி செப்டம்பர் நடந்த கொவிட் தொற்று விபரங்களின் படி வைத்தியசாலை அனுமதி 709 பேரும் அதில் 237பேர் அவசர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அன்றைய தினம் எவரும் மரணிக்கவில்லை.
தற்போது கொவிட் நிலைமை தொடர்ந்து அமைதியாகி வருகிறது. இந்தப்போக்கு சிறிது காலம் நீடிக்கலாம் என்று பேர்னில் செய்தியாளர்களிடம் நேற்று பொது சுகாதார கூட்டமைப்பின் அரசாங்க நெருக்கடி குழுவின் தலைவர் பெட்ரிக் மதீஸ் தெரிவித்தார்.
புதிய தினசரி நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை 7 நாளுக்கு சராசரி 1804 ஆக குறைந்துள்ளது. இது முந்நைய வாரத்துடன் ஒப்பிடும் போது 31வீதம் குறைவு. 10-19 வயதிற்குட்பட்டவர்களில் பெரும்பாலான புதிய நோய்தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், நிலைமை பதட்டமாக உள்ளதென மதீஸ் மேலும் கூறினார். வைத்தியசாலைகள் மிகவும் நெரிசலாகவும் முக்கால் பங்கு அவசர சீகிச்சைப் படுக்கைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதில் 30வீதம் கொவிட் நோயாளிகளால் எடுத்துக்கொள்ளப்பட்டது.



