இலங்கையில் இளைஞர் யுவதிகளுக்கு விசேட தடுப்பூசியா?
#SriLanka
#Covid 19
#Covid Vaccine
Yuga
4 years ago
ஒரு சில தடுப்பூசிகளை மாத்திரமே இளைஞர் யுவதிகள் எதிர்பார்க்கும் நிலைமை தோன்றியுள்ளதாகவும், அவர்களுக்கென விசேட தடுப்பூசியொன்று அறிமுகப்படுத்தவில்லை என்றும் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன மற்றும் பேராசிரியர் நீலிகா மலவிகே ஆகியோர் தெரிவித்தனர்.
நாட்டு மக்களுக்கு ஏற்றப்படும் தடுப்பூசிகள் அனைத்தும் தரம் வாய்ந்தவை.கொவிட் பரவல் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்ற நிலையில் விசேட தடுப்பூசியொன்று கிடைக்கும் வரை காத்திருக்காது, அனைவரும் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள முன்வர வேண்டுமென வலியுறுத்தினர்.
சிக்கல் நிலையுடன் கூடிய கொவிட் நோயாளிகளுக்கு ஆயுர்வேத சிகிச்சையளிப்பின் முக்கியத்துவம் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அதற்காக கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலைகளில், கொரோனா சிகிச்சை நிலையங்களை உருவாக்குவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.