ஜனாதிபதி, பிரதமர் இல்லாத நிலையில் நாட்டின் பிரதானி யார்?
#Sri Lanka President
#Mahinda Rajapaksa
Yuga
4 years ago
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கி நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக இன்று (18) காலை அமெரிக்கா பயணமாகியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி ஏனைய பல அரச தலைவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது இத்தாலி நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை, தற்போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதன் காரணமாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவே தற்போது நாட்டின் பிரதானியாக செயற்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.