யாழ்ப்பாணம் கோப்பாய் விபத்தில் ஒருவர் பலி
#Jaffna
#Accident
#today
Yuga
3 years ago

யாழ்.கோப்பாய் - இராசபாதை வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான வாகனம் ஒன்று முச்சக்கர வண்டியை மதிலோடு சேர்த்து மோதித் தள்ளியுள்ளதில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
ஆலயத்திற்குச் சென்றுவிட்டு கோப்பாய் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியை, எதிரே வந்த இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான வாகனம் மதிலோடு சேர்த்து மோதித் தள்ளியுள்ளது.
இதில், அப்பகுதியில் குழாய்க்கிணறு உருவாக்கும் தொழில் மேற்கொண்டுவரும் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய இலங்கை மின்சாரசபைக்குச் சொந்தமான வாகனத்தையும் விபத்திற்குள்ளான முச்சக்கர வண்டியையும் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



