சுவிற்சலாந்தில் கொண்டாடப்படும் பண்ணை நாள்
#world_news
Mugunthan Mugunthan
3 years ago

நாளை ஞாயிற்றுக்கிழமை சுவிற்சலாந்தில் பண்ணை நாள் நிகழ்வு நடைபெறவிருக்கிறது. இதில் நாளைக்கழிக்க விரும்புபவர்கள் தங்கள் பகுதியில் உள்ள உண்மையான வேலைசெய்யும் பண்ணைக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும்.
நாடு முழுவதும் சுமார் 139 விவசாயக்குடும்பங்கள் பார்வையாளர்களை வரவேற்று கிராமப்புற வாழ்க்கையின் பல அம்சங்களை காண்பிப்பர்.
இங்கு சில உணவுகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன, விவசாயத் தொழில் மற்றும் சுற்றுச்சூழலின் பல்வேறு அம்சங்களையும், தாவரங்களையும் மற்றும் பண்ணை விலங்குகளையும் நீங்கள் பார்வையிடலாம்.
இதற்கு நீங்கள் உங்கள் பகுதியல் உள்ள ஒரு பண்ணையை கண்டுபிடித்து நேரத்திற்கு முன்பே பதிவு செய்து கொள்ளல் வேண்டும்.



