பிரான்ஸில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு உதவித்தொகை.
#world_news
Nila
3 years ago

பிரான்ஸில் எரிபொருள் மற்றும் ஏனைய முக்கிய செலவுகள் அதிகரித்து குறைந்த வருமானம் பெறுவோரினை பெரிதும் தாக்குவதால் அவர்களுக்கு உதவித்தொகை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது
குறைந்த வருவாய் கொண்டவர்களுக்கு புதிய உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
அண்மையில், மின்சார கட்டணம் மற்றும் எரிவாயு கட்டணம் தொடருந்து அதிகரித்து வருகின்றது. இந்த கட்டண உயர்வை சந்தித்த, குறைந்த வருவாய் கொண்டவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக பிரதமர் Jean Castex அறிவித்துள்ளார்.
வீடு ஒன்றுக்கு 100 யூரோக்கள் வீதம், மொத்தமாக 5.8 மில்லியன் வீடுகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே பல வீடுகளுக்கு இந்த வவுச்சர் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.
அதேவேளை, மின்சார கட்டணம் தொடர்ந்தும் அதிகரிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.



