டிராப் ஆன ஆர்யா படம் மீண்டும் தொடக்கம் ஆரம்பம் !

#Cinema #TamilCinema
Prabha Praneetha
2 years ago
டிராப் ஆன ஆர்யா படம் மீண்டும் தொடக்கம் ஆரம்பம் !

ஆர்யா நடிப்பில் அமீர் இயக்கிய படம் ஒன்று கிட்டத்தட்ட ட்ராப் ஆன நிலையில் தற்போது மீண்டும் அந்த படம் தொடங்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது

சமீபத்தில் ஆர்யா நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பாட்டா பரம்பரை திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் ஆர்யாவின் மார்க்கெட்டும் அதிகரித்துள்ளது.

இதனை அடுத்து அவரது நடிப்பில் அமீர் இயக்கி வந்த சந்தனத்தேவன் என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தூசு தட்டப்பட்டு அந்த படம் தொடங்க உள்ளது .

இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் லொக்கேஷன் மதுரை அருகே படக்குழுவினர் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

ஜல்லிக்கட்டு கதையம்சம் உள்ள இந்த படம் பருத்திவீரன் படத்தை விட மிகப்பெரிய அளவில் மக்களை ரிலீசாகும் என்று அமீர் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தனத்தேவன் திரைப்படம் குறித்து அவ்வப்போது பேட்டியில் தெரிவித்த நிலையில் தற்போது அந்த படம் மீண்டும் தொடங்க உள்ளது ஆர்யாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.