அமைச்சர் நாமல் அனுராதபுரம் சிறைக்கு விஜயம்
#Namal Rajapaksha
#Anuradapura
#Prison
Prathees
4 years ago
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷஇ இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் செல்லவுள்ளார்.
அமைச்சர் நாமலுக்கு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 11 பேர் கடிதம் எழுதியுள்ளனர். அதனையடுத்தே, அவர் அங்கு விஜயம் செய்யவுள்ளார்.
அண்மையில் இராஜாங்க அமைச்சர் ஒருவர் தனது நண்பர்கள் குழுவினருடன் சென்று அரசியல் கைதிகளை மிரட்டியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனையடுத்து குறித்த அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.