கொழும்பு வைத்தியசாலையில் கைக்குண்டு வைத்தமைக்கான காரணம் வெளியானது.

#Colombo #Hospital #Attack
Yuga
3 years ago
கொழும்பு வைத்தியசாலையில் கைக்குண்டு வைத்தமைக்கான காரணம் வெளியானது.

நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள முன்னணி தனியார் வைத்தியசாலையில் கைக்குண்டை வைத்த நபர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வைத்தியசாலையிலிருந்து நேற்று முன்தினம் (14) கைக்குண்டொன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களில் ஒருவரே இந்த கைக்குண்டை வைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கைக்குண்டை வைத்த நபரே, கைக்குண்டு உள்ளமை தொடர்பான தகவலையும் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தகவல் வழங்கியமைக்காக வழங்கப்படும் பணத் தொகையை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே, இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!