வலிமை வெளியீட்டுத் திகதியில் மாற்றம். அதனால் வலிமை இழந்த அஜித் ரசிகர்கள்.

#Cinema #TamilCinema
Shelva
2 years ago
வலிமை வெளியீட்டுத் திகதியில் மாற்றம். அதனால் வலிமை இழந்த அஜித் ரசிகர்கள்.

தல அஜித் அடுத்தடுத்து கொடுத்த வெற்றிப் படத்துக்கு அடுத்து பிரமாண்ட வெற்றியை கொண்டாட ரசிகர்கள் தயாராகி விட்டார்கள்.  கொரோனா என்ன கடவுளா என்று முணுமுணுக்கும் ரசிகர்களுக்கு அஜித்தின் அடுத்த வலிமை வெளியீடால் கவலை ஏற்பட்டுள்ளதாம்.

மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். 

இந்நிலையில் வலிமை படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ரிலீஸ் தேதியை மாற்றம் அதவாது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வலிமை படமும் அதே நாளில் ரிலீஸ் செய்யப்பட்டால் வசூலில் பிரச்சனை ஏற்படும் என்பதால் படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளதாக தெரிகிறது. 

தீபாவளியில் ரிலீஸ் ஆகும் மாநாடு அதன்படி வலிமை படம் வரும் டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  எது எதுவாக இருந்தாலும் அஜித்தின் ஆட்டத்தையும் அவரின் அடிதடியையும் பார்க்க தல ரசிகர்கள் பொறுமையுடன் இருப்பது தெரிகிறது. 

அதற்கிடையில் சிம்பு உட்பட சில முன்னணி நடிகர்களின் படங்க‌ள் வெளிவர இருப்பதும். குறிப்பிடதக்கது. பொறுத்திருந்து பார்ப்போம். வலிமை முழுமையா வெறங்கையா என...