யாழ் பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவில் யாகத்தில் கலந்துகொண்ட தேரர்கள்! photos

யாழ்.பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலில் கொரோனா தொற்றிலிருந்து விடுபடுவதற்காக விசேட யாக பூஜை வழிபாடு இடம் பெற்றிருக்கின்றது.
இலங்கையில் உள்ள நான்கு கிருஷ்ணன் கோவில்களில், இவ்வாறான பூஜை வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலில், நேற்று (14), இந்த யாகம் நடைபெற்றது.
பொன்னாலை வரதராஜப் பெருமான் கோவில் பிரதம குருக்கள் சோமஸ்கந்த சர்மா மற்றும் நயினா நாகதீபம் விகாராதிபதி மீககா வதுலே ஸ்ரீ விமல ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்த யாகத்தில், பொதுபல சேனாவின் பொதுசெயலாளர் கலகொட அத்துரலிய ஞானசார தேரர் கலந்துகொண்டார்.
யாகத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த ஞானசார தேரர், இன மத வேறுபாடு இன்றி, கொரோனா தொற்றில் இருந்து விடுபட வேண்டியே யாழ்ப்பாணத்தில் இந்த சிறப்பு பூசை வழிபாட்டை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.
‘சிங்களவராக இருக்கட்டும், தமிழராக இருக்கட்டும், எந்த இனத்தவராயினும் அனைத்து இனத்தை சேர்ந்தவர்களும் கொரோனா தொற்றால்; பாதிக்கப்பட்டு கஷ்டப்படுகிறார்கள். சிலர் ஒரு நேர உணவுக்கு கூட வழியில்லாமல் உள்ளார்கள்.
‘கடவுள் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக குறிப்பாக, பௌத்த மதத்தில் நாம் பின்பற்றும் ஒரு விதிமுறையை போல, இந்து மதத்தில் உள்ள ஆகம விதிமுறையை இணைத்து, இந்த தொற்றில் இருந்து நாடு விடுபட வேண்டுமென, கடவுளிடம் வேண்டி, ஒரு விசேட பிரார்த்தனை மேற்கொண்டுள்ளோம்’ என்று கூறினார்.
.jpg)





