யாழில் சுவிற்சலாந்து துாதரகம் மீண்டும் திறக்கப்படுமா?

வடக்கு- கிழக்குமக்களின் நன்மை கருதி யாழில் மீண்டும சுவிஸ் துாதரகம் திறக்கப்படுமா? என்று மக்கள் எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றனர். இது சம்பந்தமாக கடிதம் ஒன்று சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
சுவிட்சர்லாந்து தூதரகத்தின் யாழ். அலுவலகத்தை மீள திறக்குமாறு கத்தோலிக்க ஆயர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று கத்தோலிக்க ஆயர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவிட்சர்லாந்து தூதரகத்தின் யாழ். அலுவலகத்தை மீள திறக்குமாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கத்தோலிக்க ஆயர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கத்தோலிக்க ஆயர்கள் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்கள், சிவில் சமூகத்தின் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நோக்கிய பயணத்தில் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் யாழ். அலுவலகம் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்ததாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்தக் கடிதத்திற்கு இதுவரை எந்த உத்தியோகபூர்வ பதிலும் கிடைக்கவில்லை என்று ஆயர் அலுவலகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.



