சுவிற்சலாந்தில் இளைஞர்களுக்கு தடுப்பூசி ஏற்றிக்கொள்ள விழிப்புணர்வு!

சுவிற்சலாந்தில் கடந்த 24 மணிநேர முடிவில் 13ம்திகதி செப்டம்பர் 3 பேர் கொவிட் தொற்று காரணமாக மரணித்துள்ளனர்.
சுவிஸ் ஒட்டுமொத்த சனத்தொகையில் ஏறத்தாழ 53 வீதமானோர் தற்போது முழு தடுப்பூசி ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். மேலும் 7 வீதமானவர் ஒரு தடுப்பூசி டோஸ் மாத்திரம் பெற்றுக்கொண்டுள்ளனர் கொவிட் சான்றிதழ் உள்ளவர்களுக்கு பொது இடங்களுக்கு அரசாங்கம் அணுகுவதை தடை செய்தததால், தடுப்பூசிகளின் விகிதம் அதிகரித்துள்ளது.
தடுப்பூசி செலுத்தும் பணி முதலில் வயதானவர்களுக்கும் மிகவும் தேவையுடையோருக்குமே வழங்கப்பட்டு, தற்போது 12-29 வயதுடையவர்கள் மீது கவனம் செலுத்தப்படுகிறது,
பெடரல் பொது சுகாதார அலுவலகத்தை சேர்ந்த வேர்ஜினி மஸ்சேரி கூறுகையில் செவ்வாயன்று 12-19 வயதுக்குட்பட்டவர்களில் 27 வீதம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும். 20-29 வயதுக்குட்பட்டவர்களில் 46 வீதமானவரக்ள் இரட்டை தடுப்பூசி பெற்றுக்கொண்டார்கள் என்றும் கூறினார்.
மேலும் இளைஞர்களிடையே தடுப்பூசி பெறுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த சுவிஸ் அதிகாரிகள் பல டிக் டாக் மற்றும் யுடியுப் வீடியோக்களை சமூக வளைத்தளங்களில் சென்றடைய செய்துள்ளது.



