பிரான்ஸில் அடை மழை! பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு!!
#world_news
Mugunthan Mugunthan
4 years ago
இன்று காலை முதல்அடை மழை காரணமாக Gard மாவட்டத்துக்கு விடுக்கப்பட்ட செம்மஞ்சள் எச்சரிக்கை தற்போது சிவப்பு எச்சைக்கையாக மாற்றப்பட்டுள்ளது.
Gard மாவட்டத்தில் இரு மாதங்களுக்கான மழை இரண்டு மணிநேரங்களில் கொட்டி தீர்த்துள்ளது. Météo-France வெளியிட்ட தகவல்களின் படி, 183 மில்லிமீற்றர் மழை இன்று காலை பதிவானதாக அறிவித்துள்ளது. இது இங்கு இரண்டு மாதங்களில் பதிவாகும் மழையாகும். பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் அவசியமின்றி வெளியே செல்லவேண்டாம் என தீயணைப்பு படையினர் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
அதேவேளை, இங்கு ஐந்து வீடுகளில் மின்னல் தாக்கி தீப்பிடித்து எரிந்துள்ளது. பல வாகனங்களும் சேதமடைந்துள்ளன.