அடுத்த ஆறு வருடங்களில் மரபியல் மூலம் கம்பளி மம்மொத்கள் உயிர்பிக்கப்படுமா?
#world_news
Mugunthan Mugunthan
4 years ago
பல பழமைவாய்ந்த உயிரனங்களை கம்பளி மம்மொத் தொட்டு, மீட்டெடுக்ககூடிய ஒரு திட்டத்திற்காக ஒரு நிறுவனம் 12.7 மிலியன் பவுண்ட்களை திரட்டியுள்ளது.
சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்டிக்கில் இருந்த விலங்குகள் அழிந்த பின் மீண்டும் அவற்றைக்கொண்டுவர ஹாவாட் மரபியல் பிரிவுடன் கூட்டாண்மை செய்யும் நிறுவனம் முன்வந்துள்ளது.
பெர்மா காட்டிலிருந்து மற்றும் உறைந்த புல்வெளிகளிலிருந்து நன்கு பாதுகாக்கப்பட்ட மம்மொத் ஒன்றின் DNA ஆசிய யானைகளின் மரபணுவில் செருகி யானை மம்மொத் கலப்பினம் உருவாக்கப்படும்.
இந்த விலங்கு ஆட்டிக்கில் வாழ உதவும் பண்புகளுடன் மரபணு ரீதியா வடிவமைக்கப்படும்.