அமெரிக்க மாநிலம் டெக்சஸ்ஐ தாக்கவுள்ள நிக்கொலஸ் சூறாவளி!
#world_news
Mugunthan Mugunthan
4 years ago
அமெரிக்கா டெக்சஸ் கடற்கரையை நிக்கொலஸ் சூறாவளி இன்று கடந்து வளைகுடா பகுதியில் 20 அங்குல மழை பெய்ய சாத்தியம் இருப்பதாக அபாயத்தை கொண்டு வந்திருந்தது.
மியாமியில் உள்ள தேசிய சூறாவளி மையத்தின் படி நிக்கொலஸ் சூறாவளியானது மாடாகோர்டா தீபகற்பத்திலிருந்து 10 மைல் தொலைவில் மேற்கே தென்மேற்கில் டெக்சசின் சார்ஜன்ட் கடற்கரையை வந்தடைந்துள்ளது.
இந்த நிக்கொலஸ் 2021 அட்லாண்டிக் சூறாவளி பருவத்தின் 14 புயலாகும். இந்த நிக்கொலஸ் மையம் வடகிழக்கில் 10 மைல் வேகத்தில் நகர்ந்து செவ்வாய் இன்று தென்கிழக்கு டெக்சஸிலும் நாளை புதன் தென்மேற்கு லுாசியான மீதும் மெதுவாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.