கந்தளாய் வைத்தியசாலையில் பலரின் மனதை நெகிழ வைத்த சம்பவம்! photos
#Hospital
Yuga
4 years ago
கந்தளாய் வைத்தியசாலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 மாத குழந்தைக்கு அளவற்ற பாசத்துடன் சிசிக்சை வழங்கும் சுகாதார பணியாளர்களால் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருகோணமலை கந்தளாய் வைத்தியசாலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 மாத குழந்தைக்கு பெரும்பாசத்துடன் சிகிச்சை வழங்கப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
பெற்றோர் இன்றி சிறுவர் இல்லமொன்றில் வளர்க்கப்பட்ட குழந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்ததை தொடர்ந்து குழந்தையை சிகிச்சைக்காக கந்தளாய் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
குழந்தையை மருத்துவர்களும் தாதிமார்களும் பராமரிக்கும் விதத்தை காண்பிக்கும் மனதை நெகிழவைக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வைத்தியசாலையில் காது குத்து விழா நடத்தப்பட்டுள்ளது.
