இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு எப்போது நீக்கப்படும் ?
#SriLanka
#Covid 19
#Curfew
Yuga
4 years ago
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவின் விளைவாக கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண இதனைத் தெரிவித்தார்.
இந்த நிலையில், எதிர்வரும்வாரம் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் கொரோனா பணிக்குழு பரிசீலனை செய்த பின்னரே இந்த விடயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.