அமெரிக்க உளவுத்துறை தலைவர் - இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு!
#world_news
Mugunthan Mugunthan
4 years ago
இந்திய தலைநகர் புதுடில்லிக்கு முக்கியமான பயணமொன்றை மேற்கொண்டுள்ள அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏயின் தலைவர் வில்லியம் பேர்ன்ஸ் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுடன் நீண்ட ஆலோசனை நடத்தியுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களினுடாக அறிய முடிந்துள்ளது.
இந்தச் சந்திப்பு தொடர்பாக உத்தியோகபுர்வ விவரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும், ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றிய சூழ்நிலையில் பாதுகாப்பு விவகாரங்கள் தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம். இலங்கையில் சீனாவின் அதிக பட்ச ஆக்கிரமிப்பு என்பன குறித்த ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக அறிய முடிகிறது.
முன்னதாக ரஷ்ய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிகோலய் பத்ருஷேவை அஜித் டோவல் சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின் போது ஆப்கான் அரசியல் சூழ்நிலை, சீனா மற்றும் பாகிஸ்தான் விவரங்கள் குறித்தும், ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.